Exyte Management GmbH

Speak up! அதுதான் சரியான வழி.

சட்டங்கள் அல்லது விதிமுறைகள், Exyte Code of Conduct அல்லது தொடர்புடைய உள்நடப்பு கொள்கைகள் மீறப்படுவதைக் கண்டறிந்தால் அல்லது சந்தேகமிருந்தால், தயங்காமல் தெரிவிக்குமாறு (Speak Up) நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இது Exyte டை ஒரு சிறந்த வேலை சூழலாக மாற்ற உதவும்

உயர்ந்த சட்ட மற்றும் நெறிமுறைத் தரநிலைகளுக்கு ஏற்ப வணிகம் நடத்துவதில் நாங்கள் உறுதியாகவும், அதில் பெருமையும் கொள்கிறோம் எங்கள் இணக்கமான நடத்தை மீது எங்கள் வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த நம்பிக்கையை நிலைநிறுத்த எங்களுக்கு உதவுங்கள். தவறான நடத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியவரும் போது, பொறுப்பேற்று Speak Up.“

Exyte Speak Up போர்ட்டல் எங்களது முழுமையான இணக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது Exyte இன் செயல்பாடுகள் மற்றும் நற்பெயரை கடுமையாக பாதிக்கக்கூடிய தவறான நடத்தைகளைத் தடுப்பதற்காகும். இது சாத்தியமான மீறல்கள், ரகசியத்தன்மை குறித்து பணியாளர்கள் மற்றும் தொழில் கூட்டாளர்கள் கவலைகளை எழுப்ப உதவுகிறது, தேவையானால் அநாமதேயமாக. அத்தகையை புகார்களை Exyte நிறுவனம் அலுவலகங்கள் உள்ள இடங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரமும் சமர்ப்பிக்கலாம். இந்தப் போர்ட்டல், ஒரு சுயாதீனமான மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரான EQS Group (BKMS ® System) ஆல் இயக்கப்படும் அதிகப் பாதுகாப்பான வலை அடிப்படையிலான புகாரளிக்கும் அமைப்பாகும். BKMS ® System எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய விளக்கம் மற்றும் பாதுகாப்புச் சான்றுகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்: https://www.eqs.bkms-system.com/en/.

விசாரணையை எளிதாக்க உங்கள் தொடர்பு விவரங்களை உள்ளிடவோ அல்லது பாதுகாப்பான அஞ்சல்பெட்டியை அமைக்கவோ நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இது புகாரின் செயலாக்கம் குறித்து அநாமதேயமாக உங்களுக்குத் தெரிவிக்க அல்லது விசாரணைக்கு பயனுள்ளதாக இருக்கும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. நீங்கள் யார் என்பதை எங்களிடம் கூறினாலும் கூட, விசாரணையில் நேரடியாக ஈடுபடாத எவரிடமும் உங்கள் அடையாளம் வெளியிடப்படாது.

Exyte Speak Up போர்ட்டல் பற்றிய கூடுதல் விவரங்களை கேள்வி-பதில்கள் (FAQs) பகுதியில் காணலாம்.

உங்களுடைய உதவிக்கு மிக்க நன்றி.

Exyte Speak Up திட்டம் என்றால் என்ன?
எந்த வகையான தவறான நடத்தையை நான் புகாரளிக்கலாம்?
புகாரை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை என்ன?
பாதுகாப்பான அஞ்சல் பெட்டி என்பது என்ன? அதை எப்படி அமைப்பது?
புகார் செயல்முறை முழுவதும் நான் அநாமதேயமாக இருக்க முடியுமா?
நான் எந்த வகையானத் தகவலை வழங்க வேண்டும்?
யார் என் புகாரைப் பார்க்க முடியும்?
புகாரைச் சமர்ப்பித்த பிறகு அதை நான் எவ்வாறு அணுகுவது அல்லது திருத்துவது?
நான் பயனர் பெயர் அல்லது கடவுச்சொல்லை மறந்து விட்டால் என்ன செய்வது?
நான் Speak Up செய்தால் எனக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?
Speak Up செயல்முறையின் விரிவான மேலோட்டத்தை நான் எங்கு பார்க்கலாம்?